139. அருள்மிகு வர்த்தமானேஸ்வரர் கோயில்
இறைவன் வர்த்தமானேஸ்வரர்
இறைவி மனோன்மணி
தீர்த்தம் அக்னி
தல விருட்சம்  
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருப்புகலூர் வர்த்தமானீச்சரம், தமிழ்நாடு
வழிகாட்டி திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயிலுக்கு உள்ளேயே இத்தலமும் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கண்ணபுரம் வழியாக நன்னிலம் - நாகப்பட்டினம் சாலையில் சுமார் 6 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. நாகப்பட்டினம், நன்னிலம் மற்றும் பேரளத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. நன்னிலம் இரயில் நிலையத்துக்கு மேற்கே 6.5 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Tirupugalur Varthameeswaram Gopuramஅக்னி எல்லா பொருள்களையும் உண்டதால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்குவதற்கு இந்தத் தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டார். சிவபெருமான் சந்திரசேகரராக காட்சி தந்து அக்னி பகவானின் தோஷத்தைப் போக்கியருளினார்.

மூலவர் 'வர்த்தமானேஸ்வரர்' பெரிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை 'மனோன்மணி' என்னும் திருநாமத்துடன் காட்சி தருகின்றாள். அக்னீஸ்வரர் சன்னதிக்கு வடக்குப் பக்க வழியாகச் சென்றால் அருகிலேயே அமைந்துள்ளது.

வர்த்தமானேஸ்வர பெருமானுக்கு மலர் மாலைக் கட்டிக் கொடுக்கும் தொண்டு செய்து முக்தி அடைந்தார் முருக நாயனார். மூலவருக்கு எதிரில் முருக நாயனாரும், சண்டேஸ்வரரும் உள்ளனர்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com